ஐங்குறுநூற்றில் மேலாண்மை
Main Article Content
Abstract
சங்க இலக்கிய எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று ஐங்குறுநூறு ஆகும். இந்நூல் மருதம், நெய்தல், குறிஞ்சி, முல்லை, பாலை என்று ஐந்திணையாகப் பகுக்கப்பட்டு உள்ளன. 'ஐங்குநுறூற்றில் நீர் நில மேலாண்மை’ மேலாண்மை என்பது மேலாண்மை செய்தல் அல்லது மேலாளுதல் என்பதாகும். ஒரு குறிப்பிட்ட பணியைச் செய்வதற்குப் பணியாளா்களைக் கொண்டு அமைக்கப்படும் ஓா் அமைப்பே மேலாண்மை எனப்படும். ஒரு நாடு வளா்ச்சி அடைய வேண்டும் என்றால் அந்நாட்டில் வசிக்கும் மக்கள் அனைவரும் கடின உழைப்பில் ஈடுபடுதல் வேண்டும். நெல் பயிர்கள் செல்வச் செழிப்பாக அதிகமான விளைச்சல் பெற வேண்டும். பொன் பெருகி வளமை நிறைந்ததாக இருக்க வேண்டும். அவ்வாறு நெல்வளம் பெருகும் நிலையில் நிலம் பாதுகாக்கப்பட வேண்டும். வயல்வெளிகளில் அதிகமாக விளைந்து இருக்கும் நெற்கதிர்களின் வளா்ச்சியைப் பார்த்து வறுமையில் வாடக்கூடிய இரவலர்கள் ஒரு சிலா் விளைச்சல் செய்யும் நிர்வாகத்தினரிடம் வந்து பொருள் வேண்டும் என்று நிற்கச் செய்கிறார்கள் mt;tifapy; ஐங்குறுநூற்றில் உள்ள மருதத் திணையில் பதிவு செய்யப்பெற்றுள்ள நீர் மற்றும் நில மேலாண்மையை நெல் பயிரிடுதல், அதை வறுமையில் வாடக்கூடிய மக்களுக்கு கொடுத்தல், கரும்பு விளைதல், வெள்ளப் பெருக்கு ஏற்படுதுதல் என்பதைப் பற்றி இக்கட்டுரையின் வாயிலாக அறியமுடிகிறது.
Article Details
Section

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial 4.0 International License.