எட்டுத்தொகையில் பியர்ஸ்-ன்குறியியல் கோட்பாடு
Main Article Content
Abstract
அகன்ற இப்பிரபஞ்சத்தில் ஏதேனும் ஓர் உயிருள்ள அல்லது உயிரற்ற பொருளின் பண்பைக்குறிக்கும் படிமம் (icon), ஒரு தனியனைச் சுட்டிக் காட்டும், ஒரு சுட்டுக்குறி (index) ஆகியன ஒருகுறியீட்டின் முக்கிய அம்சங்களாக அமைகின்றன. இதனைக் குறிக்கும் வகையில் மேலைநாட்டு அறிஞரான பியர்ஸ் தனது குறியியல் பற்றியக் கோட்பாட்டினை முன்வைக்கிறார். பியர்ஸ் குறிகளின் வகைகளை “இருபத்தேழு” வகையாக வகுத்துள்ளார். பின் அவ்வகையிலிருந்து சிறப்பான ஒன்பது வகைகளை தோ்ந்தெடுத்து பிரித்து அடையாளங்கண்டுள்ளார். ஒவ்வொரு குறியீடுகளும் ஒரு தனித்துவமான அடையாளப் பண்புகளைக் கொண்டும் விளங்குகிறது என்கிறார் பியர்ஸ்குறி என்பது மூன்று வகையினங்களில் பங்கேற்கக் கூடியது என்று குறியின்வகைகளை மூன்று வகையாகக் குறிப்பிடுகிறார். சங்ககால அகத்திணை பாடல்களில் குறிப்பிடத்தக்க நற்றிணை, கலித்தொகை, ஐங்குறுநூறு ஆகியவற்றின் நெய்தல் திணைகளில் பேசப்பட்டுள்ள குறியீட்டு மொழிகளைப் பற்றி விரிவாக இவ்இயலில் அறியமுடிகிறது. குறியீட்டின் அடையாளப்பண்புகளை சொற்குறி, ஒலிக்குறி, படக்குறி, பொருட்குறி என நான்கு வகையாக வகைப்படுத்துகிறார்.
Article Details
Section

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial 4.0 International License.