கி.ராஜநாரயணன் கதைகளில் உறவுத்தாக்கம்

Main Article Content

மு. பாலகணேஷ்

Abstract

மனிதனின் இன்ப – துன்பநிலைகளுக்கு அடிப்படை உறவுகளும் குடும்ப அமைப்புகளும் இவற்றுள் குடும்பம் என்ற அமைப்பில் கணவன், மனைவி, குழந்தைகள், அடக்கம் அவ்வாறே சிலஉறவுகளும் அடங்குகிறது. கி.ராவின் கதைகளில் உள்ள உறவுமுறைத் தாக்கத்தினை எளிமையாக ஒரு சில கதைகளில் காணமுடிகிறது. குடும்ப அமைப்பில் கணவன் - மனைவி உறவு, மாமியார் - மருமகள் உறவு, தாய் - மகன் உறவு என தனித்தனியாக பகுத்து பார்க்கும் நிலையில் கி.ராவின் கதைகள் இருக்கின்றன. பல்வேறு உணர்வுகள் அடங்கிய வாழ்வில் இன்பமும் துன்பமும் கலந்து கடந்து செல்ல ஒவ்வொரு உறவுமுறைகளும் அவசியம். பெண்களின் பெருமையைப் பேசும் தாய் - மகன் உறவு அதாவது தாய்மைப் பண்பு அவற்றால் பெரும் உறவு. இத்தகைய உறவிற்கு வலிமை அதிகம் என கி.ரா தனது கதைகளில் வெளிப்படுத்துகிறார். அதனைத் தொடர்ந்து தந்தை – மகள் உறவு தாயை விட பெண் குழந்தைகள் பெரிதும் விரும்புவது தன் தந்தையை பெற்றவள் தாய் என்றாள். வளர்த்தவர் தந்தை இத்திறத்தை ஆண்குழந்தைகள் சில இடங்களில் மறுக்கின்றனர். வெறுக்கின்றனர். ஆனால் பெண்குழந்தைகள் தன் தந்தைக்கு தான் பாசத்தில் முதல்இடம் என வாழ்கின்றனர். அதனையும் சிறுகதைவழி அறியமுடிகிறது. அண்ணன் - தம்பி உறவு பத்து வயதிற்கு மேல் பங்காளி மட்டுமே என்ற நிலையில் இவ்உறவுகள் படைக்கப்பட்டுள்ளது. இவ்வாறாக கி.ராவின் கதைகளில் ஒவ்வொரு உறவும் வெவ்வேறான நிலையில் இயங்குகிறது. இவற்றை எல்லாம் கடந்து ஊருக்காக என ஒரு சில உறவுகள் இருக்கின்றன என்பதையும் மாறுபட்ட உறவுகளாக அறியமுடிகிறது. இவற்றையெல்லாம் மையமாகக் கொண்டு கி.ராஜநாராயணன் கதைகளில் உறவுத் தாக்கம் இடம்பெறும் நிலைகளை காணலாம்.

Article Details

Section

Articles