சரோஜா பாண்டியன் படைப்புகளில் உளவியல்

Main Article Content

ஜெ. அமுதா

Abstract

உளவியல் மனிதனின் உள்ளம், உடல் வளர்ச்சி, நடத்தை போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டது. உளவியல் என்பது உள்ளத்தின் கோலங்களையும் கோணங்களையும் அதன் விழைவுகளையும் விளைவுகளையும் ஆராய்கிற ஓர் அறிவியலாகும்1 என்கிறார் தி.சு.நாடராஜன். மனிதனின் நடத்தை, மனித உறவுமுறைகளைப் பற்றிப் படிப்பதாகும் என வெஸ்டர் குரோ மற்றும் ஆலிஸ் குரோ விளக்கம் தருகின்றனர்.  “ஆங்கிலத்தில் ‘சைக்காலஜி’ (Psychology) என்னும் சொல் உளவியல் என்ற தமிழ்ச் சொல்லிற்கு நேரானது. சைக்கி (Psycho) லோகஸ் (Logus) ஆகிய இரண்டு சொற்களின் கூட்டாகவே ‘சைக்காலஜி’ வழங்குகிறது. ‘சைக்கி’ ஆன்மாவைக் குறிக்கும் கிரேக்கச் சொல். ஆன்மாவை ஆராயும் அறிவியல் (Science of the Soul) என்பது சைக்காலஜிக்கான பொருள். இந்தச் சொல்லை முதன்முதலில் ரூடோல்ப் ப்ஜியோக்கல் பயன்படுத்தினார் என்பர்.”2 ஆசிரியர் சரோஜா பாண்டியன் படைப்புகளில் காணலாகும் குழந்தை உளவியல் மனச்சிக்கலுக்கு குடும்ப மாந்தர்கள் எங்ஙனம் காரணமாகின்றனர் என்பதைப் பற்றி ஆராய்வதாக இக்கட்டுரை அமைகிறது.

Article Details

Section

Articles