காப்பியங்களில் அறிவியல் சிந்தனை
Main Article Content
Abstract
இன்றைய உலகம் அறிவியலால் நிறைந்திருக்கிறது. எங்கும் அறிவியல் எதிலும் அறிவியல் என உலகம் மூழ்கிக்கிடக்கிறது. இன்று அணு முதல் அண்டம் வரை ஏற்பட்டுள்ள அறிவியல் முன்னேற்றம் நம்மை வியக்க வைக்கிறது. அறிவியல் துணையின்றி ஒரு அணுவும் அசையாது என்பது போல வாழ்க்கையில் ஓர் அங்கமாக மாறிவிட்டது. விஞ்ஞானமும், அறிவியலும், தொழில்நுட்பமும் மனிதர்களுக்கு உணவு, உடை, உறைவிடம் எந்தளவிற்குத் தங்களது வாழ்வில் முக்கியப்பங்கு வகிக்கிறதோ அதே அளவிற்கு அங்கம் வகிக்கிறது எனலாம். இன்று அறிவியல் முன்னேற்றம் என்ற பெயரில் எத்தனையோ மாற்றங்கள், அறிவியல் சிந்தனைகள், அறிவியல் கண்டுபிடிப்புகள் தோன்றிக் கொண்டேயிருக்கின்றன. ஆனால் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே தமிழர்களிடம் இன்றைய அறிவியலுக்கு நிகரான தமிழர்களிடம் அறிவியல் சார்ந்த அறிவு இருந்திருப்பதைக் காணும் போது வியக்கவைக்கிறது. தமிழர்களிடம் அறிவியல் என்பது வாழ்க்கையோடு இரண்டறக் கலந்திருப்பதையும், இவற்றில் அறிவியல் சிந்தனை உண்டு என்பதை அறியாமலேயே பல செயல்பாடுகளைத் தமிழர்கள் கடைபிடித்திருக்கின்றனர். காப்பியங்களில் இயற்கையோடியைந்து வாழ்ந்து வந்த தமிழர்களிடம் அறிவியல் அறிவும் உணர்வுமே வாழ்க்கையை உந்தி மேலேற்றிக்கொண்டிருந்தன. வானவியலிலும், மருத்துவத்திலும், பூகோளத்திலும் திறன்படைத்தவனாகவே இருந்தான். உலகம் முழுவதும் வணிகம் செய்து தனது வாழ்க்கையையும், தனது நாட்டின் சிறப்பையும் வளமாக்கிக்கொண்டான். இதன் மூலம் அறிவியல் சிந்தனைகளைப் பதிவு செய்யவும் தவறவில்லை. காப்பியங்களில் அறிவியல் சிந்தனை நிறைந்திருப்பதை இக்கட்டுரை நிரூபிக்க முயற்சி செய்கிறது.
Article Details
Section

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial 4.0 International License.